Cook With Comali Rithika Interview

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றதற்கு என் மேல ஏன் கோபப்படுகிறீர்கள் என நடிகை ரித்திகா பேசியுள்ளார்.

Cook With Comali Rithika Interview : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

அஸ்வின், பவித்ரா, பாபா பாஸ்கர், கனிமொழி மற்றும் ஷகிலா என 5 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் வெகு விரைவில் இந்நிகழ்ச்சி முடிவு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி என்ற பெயரில் ரித்திகா உள்ளே சென்றார்.

இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இருப்பினும் சிலர் இவ்வளவு நாள் அவர்கள் சமைத்து முன்னேறி வந்தார்கள் இப்போது திடீரென உள்ளே நுழைவது எப்படி நியாயம் என விமர்சனம் செய்யவும் தொடங்கினார்.

இந்த நிலையில் லைவ் வீடியோ ஒன்றில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது கடவுள் கொடுத்த வர பிரசாதம். இது வைல்ட் கார்ட் என்ட்ரி. நடுவில் தான் அனுப்புவார்கள். நான் வரவில்லை என்றாலும் எனக்கு பதிலாக வேறொருவர் வந்திருப்பார் அவ்வளவுதான்.

இதில் நீ ஏன் வந்த என என்னை விமர்சனம் செய்வது கொஞ்சமும் நியாயம் இல்லாத ஒன்று என கூறியுள்ளார். நிறைய ரசிகர்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர் அதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.