Cook With Comali Pugazh Scene

சர்ச்சையை கிளப்பிய குக் வித் கோமாளி புகழின் காட்சியை விஜய் டிவி நீக்கியுள்ளது.

Cook With Comali Pugazh Scene : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக அஸ்வின், கனி, ஷகிலா, பாபா பாஸ்கர், தீபா, தர்ஷா குப்தா, மதுரை முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளாக புகழ், பாலா, ஷிவாங்கி, சுனிதா, மணிமேகலை, தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டு வருகின்றனர்.

ஒருநாள் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறுவது போல கன்பெக்ஷன் ரூம் போன்று வடிவமைக்கப்பட்டு அங்கு கோமாளிகள் சென்று ஹிண்ட்ஸ் எடுக்க வேண்டும். புகழ் சென்ற போது பிக் பாஸ் போன்ற ஒரு குரலில் ஆம்பளைங்களுக்கே உங்கள பார்த்தால் காதல் வரும் என கூறியிருப்பார்கள். இந்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் விஜய் டிவி இந்த காட்சியை நீக்கி விட்டது. இருப்பினும் ஹாட் ஸ்டாரில் இந்த காட்சி நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.