Cookku With Diwali Deepa

குக் கோமாளி தீபாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cook With Comali Deepa Young Photo : தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக வலம் வருபவர் தீபா. இவர் வெள்ளித்திரையிலும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் தீபாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் தற்போது விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் ஆழமான இடத்தை பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது தீபா தன்னுடைய இளம் வயதில் தோழியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படம் வைரலாகி தீபாவா இது என ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.

இதோ பாருங்க