rohini
திரையரங்கில் அதிக டிக்கெட் கட்டணம் வசூல் செய்வததற்காக சென்னை ரோஹிணி திரையங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Consumer court put fine to chennai rohini theater – தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் குறைந்த பட்சவிலை மற்றும் அதிகபட்ச விலை என அரசே டிக்கெட் விலை நிர்ணயம் செய்துள்ளது.

ஆனால், பல திரையரங்குகள், குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதிலும், விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் போது மிகவும் அதிகமான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை கோயம்பேடு ரோஹிணி திரையரங்கில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.40ம் அதிகபட்ச விலை ரூ.100 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் ஜுலை மாதம் சென்னை செம்பியைத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் இந்த தியேட்டரில் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தை பார்க்க சென்றார்.

அப்போது டிக்கெட் விலை ரூ.150 மற்றும் முன்பதிவு கட்டணம் 35 ரூபாய் 40 காசுகள் என மொத்தம் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.185.40 பிடிக்கப்பட்டது.

தல பேரை சொன்னாலே சும்மா அதிருதில்ல.. வியந்து போன நடிகை (வீடியோ)

இதையடுத்து அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். மேலும், கட்டண கொள்ளை, தன்னுடைய நேர வியரம் மற்றும் மன் உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தேவராஜனுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், மன உளைச்சலுக்கு ரூ. 5 ஆயிரமும் மொத்தமாக ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இந்த தொகையை ரோஹிணி திரையரங்க நிர்வாகம் தேவராஜனுக்கு கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். இந்த தொகை தேவராஜனிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை விட 100 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.