bigil trailer
பிகில் டிரெய்லர் வெளியான போது அதை ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்கள் என்பது பற்றிய வீடியோ வெளியானது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியாகி விஜய் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு, யுடியூப்பில் பல சாதனைகளை செய்து வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் டிரெய்லர் யுடியூபில் வெளியான போதே, தமிழகத்தின் சில தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.

மேலும், மக்கள் கூடும் சில பொது இடங்களில் ஸ்கீரின் அமைத்து டிரெய்லர் வெளியிடப்பட்டது.

விஜய் ரசிகர்கள் டிரெய்லரை பார்த்து ஆர்ப்பரித்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

அந்த சம்பவங்களை தொகுத்து பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.