Comon DP for 28YearsofVijayism

தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மாஸ்டர் பட நடிகர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Comon DP for 28YearsofVijayism : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் மகனாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கடினமான உழைப்பு காரணமாக இன்று உச்ச நட்சத்திரமாக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும ஆவலோடு காத்துக் கொண்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க தளபதி விஜய் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 28 வருடங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் #28YearsOfVijayism என்ற பெயரில் கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான காமன் டிபி போஸ்டரை திரையுலக பிரபலங்கள் பலர் இணைந்து வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ள மகேந்திரனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இந்த போஸ்டர் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின கொண்டாட வைத்ததோடு அனைவரையும் கவர்ந்தும் வருகிறது.