மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் மருத்துவ சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் விவேக். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களில் பிசியான நடிகராக நடித்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும் மக்களின் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதயத்தின் இடது புற வால்வில் முழுவதுமாக அடைப்பு இருப்பதாகக் கூறியது‌.

இப்படியான நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.