Comali Movie Review : Jayam Ravi, kajal aggarwal, Hiphop Tamizha, Samyuktha Hegde, Yogi Babu, Pradeep Ranganathan, Latest Review

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கோமாளி. இப்படத்தின் விமர்சனத்தை இப்பொது பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

90’s கிட்ஸ்ஸாக இருக்கும் ஜெயம் ரவி புதிய வருடம் புதிய பள்ளி என ஜாலியாக படிக்க செல்கிறார்.

அப்போது சம்யுக்தா மேலே காதல் ஏற்படுகிறது. நாளை 2000 ( புதிய வருடம் ) தொடங்க உள்ள நிலையில் சம்யுக்தாவிடம் தன்னுடைய பரம்பரை பொம்மையை பரிசாக கொடுத்து தன்னுடைய காதலை கூறுகிறார்.

காதலை சொல்லும் போது கே.எஸ் ரவிக்குமார் பொன்னம்பலத்தை கொலை செய்து விட்டு தப்பிக்கும் போது தன்னை யாரும் தாக்கி விட கூடாது என்பதற்காக சம்யுக்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து தப்பிக்கிறார்.

அப்போது ஜெயம் ரவி சம்யுக்தாவை காப்பாற்ற செல்லும் போது விபத்தில் சிக்கி கோமாவிற்கு சென்று விடுகிறார். மொத்தம் 16 வருடம் கோமாவில் இருக்கிறார்.

அதன் பின்னர் சுயநினைவு வருகிறது. சுய நினைவு திரும்பினாலும் ஜெயம் ரவி தனக்கு இன்னும் வயதாகவில்லை, பள்ளி பருவத்திலேயே இருப்பது போன்ற நினைவிலேயே இருக்கிறார்.

இதனால் அவர் சமூகத்தில் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார். அந்த பரம்பரை பொம்மை என்னவானது? அது எப்படி படத்தின் கதையை மாற்றுகிறது என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஜெயம் ரவியின் நடிப்பு படத்தை விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் கொண்டு செல்கிறது. டைலாக் மூலம் 90’s நாம் தொலைத்ததை எல்லாம் நம்முடைய நினைவிற்கு கொண்டு வருகிறார்.

கமலால் ஏமாந்த காஜல் அகர்வால், திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி – அப்போ இந்தியன் 2?

டெக்னாலஜி என்ற பெயரில் இத்தனை வருஷமா நீங்க தான் கோமாவில் இருந்து இருக்கீங்க என ஜெயம் ரவி பேசிய வசனம் 100% உண்மை.

சம்யுக்தா, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு தெளிவு

எடிட்டிங் :

பிரதீப் ஏ ராகவ்வின் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

பிரதீப் ரங்கராஜம் 90’ஸ் கிட்ஸ் பீலிங்ஸ், காதல் காட்சிகளை அழகாக நம் கண் முன் கொண்டு வந்துள்ளார்.

டெக்னாலஜி மூலமாக நெருங்கி வருகிறோம் என்ற பெயரில் விலகி தான் செல்கிறோம், ஒருத்தரை ஒருத்தர் முகத்தை பார்த்து பேசுவது கூட இல்லை என்று இன்றைய காலக்கட்டத்தின் நிலையை சரியாக காட்சிப்படுத்தியுள்ளார். போறபோக்கில் இன்றைய அரசியல் கட்சிகளையும் கலாய்த்தெடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. ஜெயம் ரவியின் நடிப்பு
2. யோகி பாபுவின் அல்டிமேட் காமெடி
3. நட்பின் மகத்துவம் பற்றி பேசியது.
4. 90’s நினைவுகளை பற்றி சிந்திக்க வைத்திருப்பது.
5. இன்றும் மக்கள் மனதில் மாறாது மனித நேயம் ஒன்று மட்டும் தான் என்ற கருத்து
6. சிந்திக்க வைக்கும் வசனங்கள்.

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான சில லாஜிக் தவறுகள்

REVIEW OVERVIEW
கோமாளி விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
comali-movie-reviewமொத்தத்தில் : கோமாளி இன்றைய சமூகம் பார்க்க வேண்டிய படம்.