PUBG
செல்போனில் தொடர்ந்து கேம் விளையாடிய கல்லூரி மாணவர் வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

College student died as playing game in cellphone – கோவை சுங்கம் சிந்தமணி பகுதியில் வசிப்பவர் சாகுல் ஹமீது(21). கல்லூரியில் மாணவரான இவர் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் உடையவர். கடந்த 3ம் தேதி பெற்றோர்கள் வெளியே சென்றுவிட்ட நிலையில் வீட்டில் உள்ள தனி அறையில் கதவை பூட்டிக்கொண்டு காலை 11 மணிமுதல் செல்போனில் பப்ஜி கேமை அவர் விளையாட துவங்கினார்.

தெறிக்கவிடும் புதிய கெட்டப்பில் தல அஜித் – வைரலாகும் தல60 புகைப்படங்கள்

மதியம் ஒருமணியளவில் அவரின் பெற்றோர்கள் இருவரும் சாகுலின் செல்போனில் அழைத்துள்ளனர். ஆனால், நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. எனவே, சந்தேகமடைந்து 3 மணியளவில் வீட்டிற்கு வந்து அவரின் அறைக்கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர் கதவை திறக்கவில்லை. எனவே, கதவை உடைத்தே உள்ளே சென்றனர். அப்போது, நாக்கை கடித்தபடி சாகுல் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு 8 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

நீண்ட நேரம் செல்போன் கேம் விளையாடியதில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்பட்டு அவருக்கு மரணம் நேர்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.