College Semester Exam Details in India
College Semester Exam Details in India

பள்ளிகள் திறப்பு மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

College Semester Exam Details in India : கொரானா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் பொது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மளிகை கடைகள், ஹோட்டல்கள், தொழில் சார்ந்த நிறுவனங்கள் போன்றவைகளுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஒரு சில பல்கலைக்கழகங்கள் மட்டும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்திருந்தது.

இந்த நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதி ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் தேர்வை நடத்துவதற்கான வழிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை தமிழில் வெளியாகி ஹிட்டான திரைப்படங்கள் எத்தனை தெரியுமா? – முழு விவரம்

அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கல்வி தப்பிக்க ஜூலை 15ஆம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் மாணவர்களுக்கு எந்த வித பாடங்கள் ஆன்லைனில் கற்பிக்கப்படும்? எவ்வளவு நேரம் கற்பிக்கப்படும் என்பது குறித்த தகவல்களும் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

அதே போல் இன்னும் பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.