Cocktail Tamil Movie Review
Cocktail Tamil Movie Review

யோகி பாபு ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள காக்டெயில் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Cocktail Tamil Movie Review : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக அனைவரையும் கவர்ந்து வருபவர் யோகிபாபு. காமெடியனாக மட்டும் வலம் வந்த இவரையும் திரையுலகினர் இவரையும் ஹீரோவாக நடிக்க வைத்து விட்டனர்.

இவர் ஹீரோவாக நடித்த தர்ம பிரபு, கூர்க்கா போன்ற திரைப்படங்கள் ஓரளவிற்கு வெற்றியை சுவைத்தன. இந்த நிலையில் தற்போது காக்டைல்ஸ் என்ற படம் OTT வழியாக வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

இந்த படத்தில் சோழர் காலத்தில் செய்யப்பட்ட முருகன் சிலை ஒன்று காணாமல் போகிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போது?? – வெளியானது அதிரடி தகவல்!

யோகி பாபு முடி திருத்தம் செய்யும் வேலையை செய்து வருகிறார். ஒரு நாள் இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக சரக்கடிக்கிறார். அப்போது இவர்களின் அறையில் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள்.

இதனால் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் அந்த பெண்ணின் உடலை அப்புறப்படுத்த முயற்சி செய்கின்றனர். அதன்பின் என்னவானது? அந்த முருகன் சிலை எப்படி காணாமல் போனது? இந்தப் பெண் எப்படி இறந்தார் என்பது தான் இந்த காமெடி படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

யோகி பாபு காமெடியனாக நடித்தாலே அவருக்கு நல்ல பெயர் இருக்கும். 2 படம் ஓரளவிற்கு ஓடி விட்டது என்பதால் மீண்டும் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

காமெடி படம் என கூறி விட்டு காமெடி பெரிய அளவில் இல்லாமல் படத்தை எடுத்துள்ளார்கள். யோகி பாபு அவருடைய வேலையை அழகாக செய்து கொடுத்துள்ளார். விஜய் டிவி காமெடி பிரபலங்களையும் படத்தில் நடிக்க வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் பெரிய அளவில் சிரிக்க வைக்கவில்லை.

குறைந்த பட்ஜெட் படம் என்று படமென்பதால் கேமராவின் குவாலிட்டி கூட காட்டுகிறது. ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

காக்டைல்ஸ் என்ற டைட்டில் கார்ட் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. காமெடி ஒரு அளவிற்கு கை கொடுத்துள்ளது.

பாடல்களும் பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பெறவில்லை.

சாந்தனு நடிக்கும் அடுத்த படம் முருங்கை காய் சிப்ஸ்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே வேற லெவல் – புகைப்படத்துடன் இதோ!