Cobra vs Chiyaan 60 Movie Release Update

கோப்ரா படம் இப்போதைக்கு வேண்டாம் முதலில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என தயாரிப்பாளருக்கு விக்ரம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Cobra vs Chiyaan 60 Movie Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா, சியான் 60, துருவ நட்சத்திரம் என மூன்று திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்க செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் சில காட்சிகள் மட்டுமே வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. அந்த காட்சிகளை கட்டாயம் வெளிநாட்டில் தான் படமாக்க வேண்டும் அப்போது தான் படத்தின் கதை சிறப்பாக இருக்கும் என இயக்குனர் உறுதியாக உள்ளார். இதனை இயக்குனரும் தயாரிப்பாளரிடம் கூறிவிட்டார்.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சியான் 60 திரைப்படத்தையும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது‌. இதனால் தயாரிப்பாளர் கோப்ரா பட ரிலீஸ் குறித்து விக்ரமிடம் கூற அதற்கு சியான் விக்ரம் முதலில் சியான் 60 படத்தை விரைவாக முடித்து ரிலீஸ் செய்துவிடலாம். அதன்பிறகு கோப்ரா பட ரிலீஸை பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

சில நாள்களில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் சியான் 60 திரைப்படம் தான் வெளியாகும். கோப்ரா படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவது உறுதியாகி உள்ளது.