வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் நேரில் ஆய்வு.., விரைவில் நிரந்தர தீர்வு - முதல்வர் K.பழனிசாமி உறுதி.!

CM Visits in Pallikaranai : தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. கடந்த வாரம் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டு இருந்தது.

இந்த புயல் சின்னம் காரணமாக வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

CM Visits in Pallikaranai

இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்துமே முழு கொள்ளளவை நெருங்கி வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதன் காரணமாக முடிச்சூர், காரப்பாக்கம் பள்ளிகரணை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெகு விரைவில் இந்த பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.