CM promises Pollan memorial

வீரன் பொல்லானுக்கு மணிமண்டபம்கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார்.

CM promises Pollan memorial : நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனூரில், ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அருந்ததியர் ஆதரவு மாநாட்டில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.

‘சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத் தளபதியாக இருந்தவர் வீரன் பொல்லான். இவர், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

வீரன் பொல்லான் ஆங்கிலேயர் படையில் மாறுவேடத்தில் இருந்து கொண்டு, தீரன் சின்னமலைக்கு ஆங்கிலேயர்களைப் பற்றிய தகவல்களை ரகசியமாக கொண்டு வந்ததாகவும், இதை அறிந்த ஆங்கிலேயர்கள் அவரை சுட்டுக்கொன்றதாகவும் வரலாறு கூறுகிறது.

வீரன் பொல்லானின் வீரத்தினை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், அவருக்கு முழு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற செய்தியையும், அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

கிராமங்களில், அருந்ததியின மக்கள் வாழ்கின்ற பகுதி நகரத்துக்கு இணையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடு இல்லாத ஆதி திராவிடர் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.