தொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம் - முதல்வர் அதிரடி! | Tn Govt | Edappadi Palanisami

CM Palanisamy Speech About COVID19 Vaccine : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் பொருளாதார சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கவும் இந்தியாவில் தீவிர ஆய்வு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று முதல் இந்தியாவில் இலவச கொரானா தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் தடுப்பூசி மருத்துவர் செந்தில் என்பவருக்கு போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள போராளிகள் உள்ளிட்டோருக்கு முதற்கட்டமாக இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போடப்பட்டு அடுத்த பதினைந்து நிமிடங்கள் அவர்கள் தனி அறையில் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். 28 நாட்களுக்கு பிறகு மற்றொரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்படும். அதன் பிறகு கொரானாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு முதல்வர் பழனிசாமி பேசியதாவது உயிரை காக்கும் மருத்துவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும்போது நானும் போட்டுக் கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

நான், நீங்கள், என் குடும்பம், உங்கள் குடும்பம் என அனைவரும் கொரானா தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 226 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது 166 இடங்களில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.