YouTube video

Tamilnadu CM Move on Nivar Cyclone : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிவார் புயலாக மாறியுள்ளது.

இந்த புயல் தற்போது புதுச்சேரிக்கு அருகே 320 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு அருகே 420 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

நாளை பிற்பகல் இந்த புயல் மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

கொட்டித் தீர்க்கும் கனமழையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை எக்மோரில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் சென்று தமிழக முதல்வர் ஆய்வு நடத்தியுள்ளார்.

மேலும் அரசு அதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார்.

புயல் கரையை கடக்கும் உள்ள காரணத்தினால் நாளை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயலை எதிர்கொள்ள தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன. பாதிப்புக்கு உள்ளாகும் அல்லது அபாயகரமான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

புயலை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்து வரும் துரிதமான நடவடிக்கைகளை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.