பிரதமருடனான சந்திப்பில் நடந்தது என்ன? - முதல்வர் பழனிச்சாமி விளக்கம்.!! | Modi | EPS

CM Explain About Meet With PM Modi : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று டெல்லி சென்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து பேசினார். அதுமட்டுமல்லாமல் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவர்களையும் சந்தித்தார்.

தற்போது தமிழகம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமருடனான சந்திப்பில் பேசியது என்ன என விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கவும் பிரதமரை அழைத்தேன் என கூறியுள்ளார்.

CM Explain About Meet With PM Modi

அதுமட்டுமல்லாமல் காவிரி – குண்டாறு இணைப்பிற்காக நிதி உதவி கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்திற்கு தரவேண்டிய புயல் நிவாரண தொகையை விடுவிக்குமாறு கேட்டு கொண்டதாகவும் பிரதமர் தன்னுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்.

திமுக ஆட்சியை பிடிக்கும் என வெளியான கருத்து கணிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு திமுகவிற்கு சாதகமானவர்களால் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.