TN CM Speech in Kadalur

கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து துவங்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

CM EPS Speech in Kadalur : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழக முதல்வர் மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேலும் மாவட்டம் வாரியாக கொரானா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும் நிறைவுற்ற திட்டங்களையும் திறந்து வைத்து வருகிறார்.

அந்தவகையில் தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் 32 கோடி மதிப்பிலான 22 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

25 கோடி மதிப்பில் முடிவுற்ற 33 புதிய திட்டங்களை திறந்து வைத்தார். மேலும் ஏழை எளிய மக்களுக்கும் பசுமை வீடு திட்டத்திற்கான நிதி உதவி வழங்கினார்.

இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களிடம் காணொலிக் காட்சி மூலமாக பேசினார். அவர்களிடம் அளிக்கப்பட்டு வரும் மருத்துவம், உணவு உள்ளிட்டவற்றை பற்றி விசாரித்தார்.

மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர விவசாயக் கூட்டமைப்பு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பேசினார்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் திட்டத்தின் கீழ் கடவூர் மாவட்டத்தில் இருந்து 56,952 மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாகவும் இவற்றில் 38,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

குறைதீர் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த 9,965 பேருக்கு தற்போது உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஜில் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலமாக கிராமப்புறத்தில் 1,04,521 வீடுகளுக்கு ரூபாய் 84.33 கோடி செலவில் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் 812 கிராமங்களில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் 652 குடியிருப்புகளுக்கு ரூபாய் 479 கோடி செலவில் ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கடலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூபாய் 687 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடலூர் துறைமுகம் ரூபாய் 135 கோடி செலவில் ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் கடலூரில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.