YouTube video

CM EPS Speech in Independence Day 2020 : இந்தியாவில் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய தேசக் தியாகிகளுக்கு நன்றி தெரிவித்த அவர் இந்த கொரோனா வைரஸ் பெற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

இதுவரை குரானா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைக்காக ரூபாய் 6650 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த எனது தலைமையிலான அரசு அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழக அரசு அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி இந்திய அளவில் முன்னிலையில் உள்ளது.

கொரானா சிகிச்சை, தடுப்பு நடவடிக்கை, மீட்கப்பட்டோர் விகிதம், குறைந்த உயிரிழப்பு என அனைத்திலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என தெரிவித்தார்.

நாட்டிலேயே அதிகமான பரிசோதனை, ஒவ்வொரு நாளும் அதிக அளவில் பரிசோதனை என போர்க்கால அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து விலை மதிப்பற்ற மனித உயிர்களை காத்து வருகிறோம் என குறிப்பிட்டார்.

ஊரடங்கு அமல் படுத்தியது போதும் அரசு விவசாய பணிகளுக்கும், சரக்கு போக்குவரத்திற்கு அனுமதியளித்து அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது என கூறினார்.

நமது மாநிலத்திலிருந்து 4 லட்சத்து 18 ஆயிரத்து 903 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் 64,661 வெளிநாடு வாழ் தமிழர்களை அந்த பாரத் மற்றும் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் தமிழகம் கொண்டு வந்துள்ளோம் எனக் கூறினார்.

மாநகராட்சி பெருநகராட்சி நகராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதியில் இருந்தும் மறுமுறை உபயோகிக்கும் மாஸ்க்குகளை அம்மாவின் அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வீடுவீடாக காய்ச்சல் சளி இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்துதல் சிகிச்சை அளித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறோம் என கூறினார்.

தற்போது மாநில அளவில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கைகளை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த 1800 மருத்துவர்கள், 7000 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நவீன உயிர் காக்கும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. சிகிச்சைக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் போதுமான அளவில் மருத்துவமனைகளுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார். போதுமான அளவில் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் சித்தமருத்துவ முறையும் கொரானா சிகிச்சைக்கு சிறந்த பயனளித்து வருவதாக தெரிவித்தார்.

இதுவரை அம்மாவின் அரசு கொரானா தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சைக்காக ரூபாய் 6650 கோடி செலவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட அடுத்த 4 மாதங்களுக்கு 2.01 கோடி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணமும் அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 17 அமைப்புசாரா தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், திரைப்படத்துறை தொழிலாளர்கள், 14 வாரிய தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்கள் என 36.6 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா இரண்டாயிரம் என நிவாரணமாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள், சிறப்பு முகாம்கள், சமூக உணவுக் கூடங்கள் மூலமாக இலவச உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் ஊரகத் தொழில்கள் மேம்படுத்தவும் வருமானத்தை பெருக்கவும் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரானா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பொதுமக்களின் நலன் கருதி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரானா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன் மூலம் ஏழை எளிய மக்களின் மருத்துவத்திற்கான செலவை அரசே ஏற்கும் என தெரிவித்தார். இந்த சலுகை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் தன்னலம் கருதாது அயராது உழைத்து வரும் அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவர்களுக்கு தகுந்த விருதுகளை அளித்து அம்மாவின் அரசு கௌரவப்படுத்த உள்ளது என்பதையும் தெரிவித்தார்.

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு ஏற்ப நாம் அந்நியரை எதிர்த்து எப்படி ஒன்றாக இணைந்து போராடினோமோ அதேபோல் மாண்புமிகு அம்மாவின் அரசு கொரானா தொற்று நோய்க்கு எதிராக மக்களை பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்புடன் போராடி வெல்லும் என உறுதிபட தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ரூபாய் 6650 கோடி செலவு – சுதந்திர தின விழாவில் முதல்வர் தகவல்

அதிக அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் குறுகிய காலத்தில் ராமநாதபுரம் விருதுநகர் திண்டுக்கல் நீலகிரி அரியலூர் நாகப்பட்டினம் கள்ளக்குறிச்சி திருவள்ளூர் திருப்பூர் நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரியை கொண்டுவர மத்திய அரசிடம் அனுமதி பெற்று அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மாண்புமிகு அம்மாவின் அரசு நீட் தேர்வு நடத்தக்கூடாது என கொள்கை முறையில் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வால் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பை பயிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது என்பதை அறிந்து மருத்துவ படிப்பிற்கான உள் ஒதுக்கீடாக 7.65 விழுக்காடு வழங்க முடிவு செய்து அதனை சட்டமாக்க மாண்புமிகு அம்மாவின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

மேலும் தமிழக மக்களின் நலனுக்காக அல்லும் பகலும் அயராது உழைப்பேன் எனவும் சுதந்திர தின விழாவில் பேசினார் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.