CM EPS Meet With PM

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார்.

CM EPS Meet With PM : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது.

வரும் மே மாதம் முதல் வாரம் அல்லது ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார்.

இந்த சந்திப்பில் தேர்தல் கூட்டணி குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பில் காவிரி குண்டாறு இணைப்பு குறித்து பேசப்படும். இதுகுறித்து பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு ஆறுகளின் இணைப்பிற்கான நிதிக்கான கோரிக்கையை தமிழக முதல்வர் முன் வைப்பார். மேலும் தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவையிலுள்ள நிதியை செலுத்துமாறு கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மிக பிரம்மாண்டமாக கட்டி வரப்படும் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இடத்தை திறப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.