CM EPS Latest Announcements

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

CM EPS Latest Announcements : தமிழகத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பெய்த பருவ மழையால் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பாதிப்புக்கு உளளாகினர்.

அதுமட்டுமல்லாமல் நிவர், புரெவி போன்ற புயல்களும் ஒரு நல்ல மழையை கொடுத்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெருமளவில் பாதிப்பை சந்தித்தனர்.

தற்போது இந்த விவசாயிகளுக்கான நிவாரண நிதியை வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் ஒரு ஏக்கருக்கான இடுபொருள் நிவாரண நிதி 13 ஆயிரத்து 500 ஆக இருந்த நிலையில் அதனை 20 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூபாய் 1,116 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் வழியாக கல்வி கற்க அடுத்த மூன்று மாதங்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிவிப்பு இன்று முதல் அமலாகிறது. மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குவதற்கான டேட்டா கார்டுகளை இன்று வழங்கினார் முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில் மொத்தம் 9,69,047 மாணவர்களுக்கு டேட்டா கார்டுகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.