புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாள் - மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் பழனிச்சாமி.!!

CM Edappadi Palanisamy Respect to MGR : தமிழக அரசியலில் பெரும் புள்ளியாக பல்வேறு பரட்சிகளை செய்து புரட்சி தலைவராக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர்.

இவருடைய 104-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதே போல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் முகாம் அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.