ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் - தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!! | TN Govt | EPS

CM Announcement About Caste Wise Census : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திறம்பட அதிமுக அரசு செயலாற்றி வருகிறது.

ஏற்கனவே தமிழக முதல்வர் தமிழகத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த ஆணையம் உடனே செயல்பட்டு வருவதாகவும் விரைவில் கணக்கெடுப்பு தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

CM Announcement About Caste Wise Census

ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்துமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த சாதி ரீதியான கணக்கெடுப்பு முடிவுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69% இட ஒதுக்கீடு வழக்கிற்கும் தேவைப்படுவதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.