Chiyangal SneakPeek Video

சியான்கள் படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chiyangal Sneakpeek Video : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அவைகளில் நல்ல சிந்தனையுள்ள திரைப்படங்களாக வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

அந்த வரிசையில் தற்போது வயதானவர்களுக்கும் ஆசை உண்டு என்பதை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சியான்கள்.

வைகறை பாலன் இயக்க கரிகாலன் தயாரித்து நடித்துள்ள இந்தப் படத்தில் 5 வயதானவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாளை கிறிஸ்துமஸ் விருந்தாக படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஐந்து முதியவர்களை ஒரு மலை மீது அமர்ந்து தங்களின் ஆசைகள் பற்றி பேசிக் கொள்கின்றனர்.

ஒரு முதியவர் எனக்கு விமானத்தில் போகணும் அதுக்காக கொஞ்சம் காசு கூட சேர்த்து வச்சு இருக்கேன் என கூறுகிறார். இன்னொருவர் கடலைப் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்கிறார்.

மணியாட்டி என்ற பெரியவர் ஒரே ஒரு நாள் ராத்திரி வெள்ளைக்காரியுடன் அப்படி இப்படின்னு ஜாலியா இருக்கணும் என தெரிவிக்கிறார். இன்னொரு முதியவர் ஒருத்தன கதறக்கதற அடிக்கணும் நண்பனுக்காக சண்டைக்கு வர மாட்டியா மிலிட்டரி என தன் நண்பனிடம் பேசுகிறார்.

வயதானவர்களுக்கு உள்ளேயும் இப்படியெல்லாம் ஆசை இருக்குமா என நம்மை வியக்க வைக்கும் வகையில் இந்தத் திரைப்படம் உருவாக்கியுள்ளது.

இதோ அந்த ஸ்னீக் பீக் வீடியோ

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.