Chiyangal Movie Contest

உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களின் ஆசையை நிறைவேற்ற சியான்கள் படக்குழு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

Chiyangal Movie Contest : தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் திரைப்படம் சியான்கள். வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன் நாயகனாக நடித்து தயாரிக்கும் திரைப்படம் தான் இது.

பாபு குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய முத்தமிழ் இசையமைத்துள்ளார். மேலும் மப்பு ஜோதி பிரகாஷ் என்பவர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தின் டீசர் யூடியூப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது சியான்கள் படக்குழு மூவி கன்டஸ்ட் ( Movie Contests ) ஒன்றை நடத்தவுள்ளது.

அதாவது உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் படக்குழு இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆசையை நிறைவேற்ற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும் தான்.

அதாவது உங்கள் வீட்டு பெரியவர்களின் ஆசையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அந்த வீடியோ 30 விநாடிகளுக்கு குறையாமல் ஒரு நிமிடத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அந்த வீடியோவை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் ஏதாவது ஒன்றில் #ChiyaangalMovieContest என்ற ஹாஸ்டேக்குடன் பதிவிட்டு @production_kl மற்றும் @kalakkalcinema டேக் செய்யவும்.

இந்த போட்டியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளரின் ஆசை நிறைவேற்றப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உடனே இந்த போட்டியில் கலந்து கொண்டு உங்கள் வீட்டுப் பெரியவர்கள் ஆசையை நிறைவேற்றுங்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.