Kadaram Kondan

Kadaram Kondan : சீயான் விக்ரம் கமல்ஹாசன் நடிப்பில் அக்ஷராஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ள சீயான் 56 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

சாமி ஸ்கொயர் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடிக்க உள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதன் படி தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு கடாரம் கொண்டான் என பெயரிட்டுள்ளனர்.

தற்போது ரசிகர்கள் இந்த அறிவிப்பை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள போஸ்டர் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.