Chiyaan Vikram in Pushpa Movie

விஜய் சேதுபதி வேண்டாம் என விலகிய படத்தில் சியான் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chiyaan Vikram in Pushpa Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் கிடுகிடுவென உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார்.

மேலும் இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாகவும் நடிக்க தொடங்கினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக பேட்டை படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாக இருந்த புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென அப்படத்திலிருந்து விலகினார்.

சுகுமாரன் இயக்கும் இந்த படத்தில் தற்போது வில்லனாக நடிக்க சியான் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்டைலிஷ் நடிகரான அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க சியான் விக்ரம் ஓகே சொல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.