Chiyaan Vikram in First Lover

சியான் விக்ரம் தன்னுடைய முதல் காதலி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Chiyaan Vikram in First Lover : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா துருவநட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் பொன்னியின் செல்வன் மகாவீர் கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சியான் விக்ரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது ரசிகர் ஒருவர் உங்களின் முதல் காதலி யார் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விக்ரம் என்னுடைய எட்டாவது கணக்கு டீச்சர் என பதிலளித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது விக்ரம் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CJGfVDaBLD3/?igshid=zet3333ix8ge