தாத்தாவான விக்ரம்

நடிகர் விக்ரமின் மகளுக்கு அழகிய குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். படத்திற்கு படம் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இவருடைய மகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேரனுடன் திருமணம் நடைபெற்றது.

தற்போது சியான் விக்ரம் மகளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் விக்ரம் தாத்தாவாக ப்ரோமோஷன் வாங்கியுள்ளார்.

பெயருக்குத்தான் தாத்தா ஆனால் இன்னும் கட்டுமஸ்தான உடல் அமைப்போடு யங்கான நடிகர் தான் விக்ரம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.