Vikram About Thala Ajith
Vikram About Thala Ajith

தல அஜித்திடம் இருந்து ஒரு பொருளைத் திருட ஆசைப்படுவதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

Chiyaan Vikram About Thala Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தல அஜித்திற்கு ஆரம்பத்தில் பல படங்களில் குரல் கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே இன்று வரை நல்ல நட்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சியான் விக்ரமிடம் தொகுப்பாளர்கள் தற்போதுள்ள நடிகர்களிடம் இருந்து ஒரு பொருளைத் திருட ஆசைப்பட்டால் நீங்கள் யாரிடமிருந்து என்ன பொருளை திருடுவீரகள் என கேட்டுள்ளனர்.

அதற்கு சியான் விக்ரம் தல அஜித்திடமிருந்து அவருடைய பைக்கை திருட ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அதே போல் விக்ரம் நடிப்பில் கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உருவாகின்றன. மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.