Chiyaan 60 Movie Update

சியான் 60 திரைப்படத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவர் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Chiyaan 60 Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சியான் 60. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் கொரியோகிராஃபர் ஆக ஷெரிப் மாஸ்டர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.