Chiyaan 60 Movie Pooja Update

துருவ் மற்றும் விக்ரம் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ள சியான் 60 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Chiyaan 60 Movie Pooja Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் விக்ரம் மகாவீர் கர்ணன் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து முதல் முறையாக நடிக்க உள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் இதுவரை தொடங்காமல் இருந்துவரும் நிலையில் தற்போது எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

பிப்ரவரி மாதத்திற்குள் சியான் விக்ரம் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்து விடுவார் எனவும் கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.