Chithra With Ajith Cutout

அஜித் ரசிகர்களையும் எமோஷனல் ஆக்கியுள்ளது சித்ராவின் புகைப்படம் ஒன்று.

Chithra With Ajith Cutout : தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா. தொகுப்பாளினியாக பயணத்தைத் தொடங்கி தன்னுடைய திறமையால் படிப்படியாக வளர்ச்சி கண்டார்.

இப்படியான நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் மன உளைச்சலில் பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மறைவு சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் பேனருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் எமோஷனலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சித்ரா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய நினைவுகளும் அவருடைய புன்னகையும் தொடர்ந்து ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கும் என தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.