சித்தி சீரியலில் நடித்த சிவகுமாருக்கு பதிலாக பார்ட் 2-ல் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் சித்தி. இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் சித்தி 2 சீரியல் தொடங்க உள்ளது.
இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் வரும் 27-ம் தேதி முதல் சித்தி 2 ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சீரியலில் சிவகுமாருக்கு பதில் பிரபல நடிகரான பொன்வண்ணன் நடிக்க உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதே கண்ணின்மணி பாடலோடு, நடுத்தர குடும்பத்தைத் தாங்கும் தலைவியாக வருகிறாள்.#சித்தி2 ஜனவரி 27 முதல் இரவு 9 மணிக்கு உங்கள் #சன்டிவி – யில் காணத்தவறாதீர்கள். #Chithi2 #Chithi2OnSunTV #ChithiIsBack #Radhika #SunTV #SociallySun@realradikaa pic.twitter.com/yy7u4QFSCB
— Sun TV (@SunTV) January 17, 2020