Chinmayi

Chinmayi Video : என் கிட்டயும் ஆள் இருக்கு, சிதைச்சுடுவேன் என பாடகி சின்மயியை தயாரிப்பாளர் ஒருவர் மிரட்டியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரையுலகில் பாடகியாகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வலம் வருபவர் சின்மயி. சமீப காலமாகவே இவர் மீ டு என்ற பெயரில் திரையுலக பிரபலங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை பலர் மீது பாலியல் குற்றசாட்டிகளை பதிவிட்டு வருகிறார்.

இதில் பெரிதும் அடிபட்ட பெயர் என்றால் அது கவிஞர் வைரமுத்துவின் பெயர் தான். 15 வருடங்களுக்கு முன்னர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

சின்மயீயின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவுகள் கிடைத்து வந்தாலும் அதற்கு இணையான அளவில் எதிர்ப்பும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளரான கே. ராஜன் அவர்கள் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பாடகி சின்மயியை தாக்கி பேசியது மட்டுமில்லாமல் அவரை சிதைக்க என்னிடம் ஆள் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

இதனை பாடகி சின்மயீயே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பயப்படணுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.