YouTube video

Chief Minister Edappadi Palanisamy Speech : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு முதல்வர் பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தொடங்கியுள்ளனர்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் புதல்வரும் தினத்தந்தி குழுமத்தின் அதிபருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருஉருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Chief Minister Edappadi Palanisamy Speech at Thoothukudi

தினத்தந்தி குழுமத்தின் அதிபரர் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அப்போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது,

50 ஆண்டுகள் முன்பு செய்யப்பட்டு வந்த புகார் பெட்டி போன்ற விஷயங்களை ஸ்டாலின் பிரச்சாரம் என்கிற பெயரில் செய்து வருகிறார், அனால் நாங்கள் நவீனமாக சிந்தித்து ‘1100’ என்கிற புகார் எண்னை மக்களுக்கு கொடுத்துள்ளோம். வீட்டில் இருந்தபடியே மக்கள் இந்த எண்ணிற்கு அழைத்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம், உடனே தீர்வு வழங்கப்படும்.

ஏற்கனவே நான் செப்டம்பர் மாதம் 1100 குறை தீர்ப்பு எண் பற்றிய அறிவிப்பை சட்டமன்றத்தில் மேற்கொண்டேன், அதன் பிறகு ஸ்டாலின் இந்த புகார் பெட்டி என்கிற நாடகத்தை நடத்தி வருகிறார்.

அப்போது அறிவித்த திட்டத்தை சென்ற வாரம் துவங்கியும் விட்டோம், இப்போது திமுகவிற்கு மனு வாங்கும் வேலை கூட இல்லை. என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்களும் மக்கள் கூட்டம் அதிக அளவு இருந்தது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.