Chidambaram Arrest : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, P.Chidambaram, Gangress

Chidambaram Arrest :

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் கோரிக்கை மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா என்று இன்று தெரியவரும்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அவரது வீட்டிற்குள் சுவர் எகிறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர். கடந்த வாரம் முழுவதும், ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட தகவல் இந்திய அரசியலையே உலுக்கியது குறிப்பிடதக்கது.

இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறினார். அதோடு,. ப.சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட சிபிஐ மூலம் கஸ்டடி இன்றோடு முடிகிறது. ஆனால், இதே வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறையும் முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ப.சிதம்பரத்தின் கஸ்டடியை நீட்டிக்கவும் சிபிஐ கோரிக்கை வைக்க உள்ளது.

இந்நிலையில் சிபிஐ நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவிற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல்.!

அதில் ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் அளிக்கப்பட்டது தவறானது என்று கூறி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடக்க உள்ளது.அமலாக்கத்துறை வழக்கில் இன்று வரை மட்டும்தான் ப. சிதம்பரத்திற்கு இடைக்கால முன் ஜாமீன் கிடைத்துள்ளது. அதை நீட்டிக்க கோரி ப. சிதம்பரம் தரப்பு இன்று கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

எனவே வழக்கை விசாரித்த பின்பு தான் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா என்பது தெரியவரும். மேலும் இச்சம்பவம் இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது..

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.