கவின், லாஸ்லியா காதல் விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் சேரன் பேசியத்திற்கு கவின் ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்ததால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு இன்றைய தலைமுறை இளைஞர்கள் மத்தியிலும் பரிச்சயமாகி விட்டார் சேரன்.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது லாஸ்லியாவை தன் மகளாக நினைத்து அதிக பாசத்தை செலுத்தினார். லாஸ்லியாவும் கவினின் காதல் வரை சேரன் மீது பாசமாக தான் இருந்தார்.
கவினும் லாஸ்லியாவும் காதலிக்க தொடங்கியதும் லாஸிற்குள் சேரன் மீதான அபிப்ராயம் மாற தொடங்கியது.
இந்நிலையில் சேரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவின் லாஸ்லியா காதல் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கவின் ரசிகர்கள் சேரனை வம்பிழுக்க தொடங்கியுள்ளனர், இதனையடுத்து சேரன் நான் பேசியது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள், நான் அவர்களின் வாழ்க்கையை தலையிட மாட்டேன், அதற்கான அவசியமும் இல்லை.
இனி அவர்கள் இருவரின் பெயர் என்னுடைய வாயில் இருந்து வராது என கூறியுள்ளார். இனியும் இது குறித்து என்னிடம் பிரச்சனை செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
கவின் லாஸ்லியா ரசிகப்பெருமக்களுக்கு..
உங்களுக்கு பிடித்தவர்களை BBவீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புன்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை.. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன்.. அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.— Cheran (@directorcheran) October 19, 2019
தகாத வார்த்தைகளால் பேசுவதால் ப்ரச்னை தீராது.. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை..
நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.இருந்தும் ப்ரச்னை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன்.— Cheran (@directorcheran) October 19, 2019
கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை.
இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது.
என் ப்ரச்னைக்கு வரவேண்டாம்.— Cheran (@directorcheran) October 19, 2019
நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி.
— Cheran (@directorcheran) October 19, 2019