Cheran Review on Soorarai Pottru
சூர்யாவின் சூரரைப்போற்று படம் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் இயக்குனர் சேரன்.

Cheran Review on Soorarai Pottru : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தின் ஜி வி பிரகாஷ் இசையில் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் சூரரை போற்று.

சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. டெக்கான் ஏர்லைன்ஸ் பவுண்டர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தின் கதை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவிடம் இருந்து ஒரு வெறித்தனமான நடிப்பை கண்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்களும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் சேரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது @Suriya_offl @Sudhakongara_of வாழ்த்துக்கள்.. முயற்சிகள் தோற்கும்போதும் தோற்கடிக்கப்படும்போதும் கிடைக்கும் வலி என்ன என நன்றாக உணர்ந்தவன் என்பதால் அதிகம் பாதித்தது “சூரரை போற்று” திரைப்படம்.. என்னதான் ஏழை கனவு வென்றாலும் இறுதியில் பணக்காரன் அதை பிடுங்கிகொள்கிறான். இதுதானே உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் சேரனின் இந்த பதிவுக்கு நடிகர் சூர்யா நன்றிகள் பல என பதிலளித்துள்ளார்.

அதேபோல் விக்னேஷ் சிவன் படத்தை பார்த்துவிட்டு வீடியோ ஒன்றில் விமர்சனத்தைக் கூற அதற்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.