Cheran Request to CM
Cheran Request to CM

கொரானாவில் இருந்து சென்னையை காப்பாற்ற முதல்வருக்கு இயக்குனர் சேரன் அசத்தலான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

Cheran Request to CM : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்திய அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும்பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இயக்குனர் சேரன் சென்னையை கொரானா பாதிப்பிலிருந்து காப்பாற்ற ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

உங்க சிரிப்பையும் அன்பையும் ரொம்ப மிஸ் பண்றோம்.. இறந்து போன பிரபல தமிழ் நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சேரன் – வைரலாகும் எமோஷனல் பதிவு!

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் @CMOTamilNadu @Vijayabaskarofl அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பயமும் கொரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கி கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்.

15 நாட்களில் முடிந்துவிடும் என நினைத்து சொந்த ஊருக்கு போகாமல் தங்கியவர்கள் நிறைய. இப்போது போக நினைக்கிறாத்கள். சுகாதாரமாக இருக்கும் அவர்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வெளியில் இருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கும் அதன்மூலம் பரவும் அபாயம் இருக்கிறது.

எனவே சென்னையில் கொரொனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும்.. அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.

சுஷாந்த் தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா?? எட்டு பாலிவுட் பிரபலங்கள் மீது தொடரப்பட்ட வழக்கு – பரபரப்பு தகவல்

மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள்.. அது நியாயமும் கூட.. அதற்காக முறையே யோசித்து செயலாற்றவேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன் என அவரது பதிவில் கூறியுள்ளார்.

சேரனின் இந்த ஐடியா மிகவும் சரியானது என ரசிகர்களும் கூறி வருகின்றனர். சேரனின் இந்த ஆலோசனை தமிழக அரசு ஏற்குமா ஏற்காத என்பதை சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.