Cheran About Irandam Kuthu

சர்ச்சைக்குரிய இரண்டாம் குத்து படம் பற்றி சேரன் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

Cheran About Irandam Kuthu : தமிழ் சினிமாவில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து.

இந்த இரண்டு அடல்ட் காமெடி படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் குத்து என்ற பெயரில் புதிய அடல்ட் காமெடி படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர் டீசர் உள்ளிட்டவைகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் சேரன் இது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது முதல் குத்து வெளியான போது மக்கள் அதை புறம் தள்ளி இருக்க வேண்டும். கலெக்ஷனை வாரிக் கொடுத்த தைரியத்தில் இரண்டாம் குத்து திரைப்படம் எடுத்துள்ளார்கள் என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

சேரனின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன.