தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Center announce rain for tn – சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என தெரிவித்தார்.

எப்பா ஷெரினா இது? நீச்சல் குளத்தில் இப்படியொரு போஸா? – புகைப்படங்கள் இதோ

மேலும், அரியலூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்,.

நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதோடு, அக்டோபர் 1ம் தேதி வரை 4ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு அந்த கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.