COVOD19 Update 28.09.20
COVOD19 Update 28.09.20

கொரானா பரிசோதனையில் சென்னை புதிய சாதனை படைத்துள்ளது.

Chennai Makes Record on COVID 19 Testing : சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு தமிழகமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் அயராத உழைப்பால் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இந்த வைரஸ் பற்றி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று (ஜூலை 18, சனிக்கிழமை) ரிப்பன் மாளிகையில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள மக்களை சோதிக்க தமிழக அரசு ரூபாய் 200 கோடி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மொத்தம் ரூபாய் 400 கோடியை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக செலவிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

லாக் டவுன் ஆல் வந்த விபரீதம்.. காமெடி நடிகைக்கு மளமளவென வளர்ந்த தாடி – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இந்த மாதத்தில் பாசிட்டிவ் கேஸ்களை 5% குறைப்பதே எங்களது நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். லாக் டவுனுக்கு முன்னர் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யும்போது அவர்களில் 1400 பேர் பாசிட்டிவ் என கண்டுபிடிக்கப்பட்டனர்.

லாக் டவுனுக்கு பின்னர் நாட்டிலேயே அதிக அளவாக சென்னையில் ஒரு நாளைக்கு 13 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவர்களில் 1200 பேருக்கு மட்டுமே பாசிட்டிவ் என ரிசல்ட் வருவதாக கூறியுள்ளார்.

இதுவரை 5 லட்சம் பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 8.5 லட்சம் பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். 80 சதவீத நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.

சென்னையில் மட்டும் கொரானா பரிசோதனையை மேற்கொள்ள 350 மருத்துவர்கள் பணியாற்றி வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் தற்போது 20 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.