Chennai Drinking Water Stock Details
Chennai Drinking Water Stock Details

17 வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு குடிநீர் கொடுக்கும் ஏரிகள் வற்றாமல் உள்ளது.

Chennai Drinking Water Stock Details : தமிழகத்தின் தலைநகரமாக விளங்கி வரும் சென்னையில் கோடிக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

சென்னை மாநகரத்திற்கு பூண்டி, சோழவரம், ரெட்டில்ஸ், செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் இந்த ஏரிகள் டிசம்பர் மாதத்திற்குள் வறண்டு விடும். அதன் பின்னர் பருவமழையில் தான் மீண்டும் ஏரிகள் நிரம்பத் தொடங்கும்.

ஆனால் இந்த வருடம் அனைத்து ஏடுகளிலும் வற்றாமல் காணப்படுகிறது. 17 வருடங்களுக்கு முன்னர் தான் இது போன்று அனைத்து ஏரிகளும் வற்றாமல் இருந்தது.

ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி எந்தெந்த ஏரிகளில் எவ்வளவு தண்ணீர் இருப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்.

  1. பூண்டி :

3231 கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 105 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

  1. சோழவரம் :

1081 அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 71 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

  1. ரெட்டில்ஸ் :

3,300 கன அடி கொள்ளளவு கொண்ட ரெட்டில்ஸ் ஏரியில் இதுவரை இல்லாத அளவாக 2,575 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

  1. செம்பரம்பாக்கம் :

3,645 கன அடி நீர் கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 1,888 கன அடி நீரை தக்க வைத்து கொண்டுள்ளது.

  1. வீராணம் :

1,465 கன அடி நீர் கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 1,433 அடி நீர் உள்ளது.

இது சென்னைக்கு டிசம்பர் மாதம் வரை தேவைப்படும் தண்ணீரில் 48 சதவீத அளவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.