Chellamma Song Record

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் செல்லம்மா பாடல் வீடியோ புதிய சாதனையை படைத்துள்ளது.

Chellamma Song Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான், டாக்டர் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

டாக்டர் திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார். படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிவடைந்து இப்படம் மார்ச் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.