Charu Haasan Again Join With Vijay Sri
Charu Haasan Again Join With Vijay Sri

நடிகர் சாருஹாசன் மீண்டும் தாதா 87 பட இயக்குனருடன் இணைகிறார்.

Charu Haasan Again Join With Vijay Sri : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் சாருஹாசன்.

87 வயதாகும் இவர் விஜய் ஸ்ரீஜி என்பவரின் இயக்கத்தில் வெளியான தாதா 87 என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

ஆனால் இப்படத்தில் சாருஹாசன் கதாபாத்திரம் குறைந்த நேரம் மட்டுமே இடம்பெறும். ஆனால் அவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனால் இயக்குனர் விஜய் ஸ்ரீ மீண்டும் ஒரு கேங்க்ஸ்டர் கதையில் ஷாருஹாசனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் சாருஹாசன் மிக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து மைம் கோபியும் நடிக்கிறார் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

துருவ் விக்ரமின் வாழ்க்கையே மாறப் போகிறது.. சியான் 60 குறித்து மாஸ்டர் பட பிரபலம் அதிரடி பதிவு!

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி ஏழு நாட்கள் நடை பெற்றுள்ளன. அதன் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால் படப்பிடிப்புகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சாருஹாசனின் லுக் நிறைந்த பால் தக்கரே போலவே இருக்கும். இந்த படத்தில் மதத்தைப் பற்றியும் பேச இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்காக நாங்கள் ஒரு டீசரை உருவாக்கியுள்ளோம். அது படத்தின் கதைக்களத்தை இன்னும் தெளிவு படுத்தும் என தெரிவித்துள்ளார்.

மிகவும் பிரபலமான ஹீரோ இப்படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகளை கேரளா மற்றும் கோவா ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் அனைத்தும் இந்த ஊரடங்கு முடிந்த பின்னரே தொடங்கும்.

முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்புகளை தொடங்குவோம் என தெரிவித்துள்ளார்.