Character Changes Update in Chithi 2
Character Changes Update in Chithi 2

சித்தி 2 சீரியலில் முக்கிய நடிகரை மாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை அந்த சீரியலில் நடித்துவரும் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

Character Changes Update in Chithi 2 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் ராதிகா சரத்குமார். மேலும் இவர் சின்னத்திரையிலும் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் சன் டிவியில் சித்தி சீரியல் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஷூட்டிங் நடைபெறாமல் இருப்பதால் சீரியல் ஒளிபரப்ப படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

நடனமாடும் போது வழுக்கி விழுந்த லட்சுமி மேனன் – இணையத்தில் வெளியான ஷாக்கிங் வீடியோ!

தற்போது மீண்டும் சூட்டிங் நடைபெறத் தொடங்கி இருப்பதால் வெகு விரைவில் சித்தி-2 சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த சீரியலில் ராதிகாவின் கணவராக பொன்வண்ணன் நடித்து வந்தார். தற்போது அவர் இந்தத் சீரியலில் இருந்து விலகிக்கொள்ள அவருக்கு பதிலாக நிழல்கள் ரவி கமிட்டாகியுள்ளார்.

இது குறித்த புகைப்படம் ஒன்றை ராதிகாவின் மகளாக நடித்து வரும் ரேயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.