Changes in Vijay 65 Production
Changes in Vijay 65 Production

சம்பள விவகாரம் காரணமாக தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைவிட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Changes in Vijay 65 Production : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க இருந்தார்.

தற்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் தள்ளிப் போய் வருகிறது.

சினிமா துறை முற்றிலுமாக முடங்கிப் போய் உள்ளதால் நடிகர்கள் தங்களது சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.

வெறித்தனமா கொண்டாட்டத்துக்கு தயாராகும் விக்ரம் ரசிகர்கள்.. கோப்ரா படக்குழு வெளியிட்ட அதிரடி அப்டேட்!

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தளபதி விஜயை சம்பளத்தில் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு அணுகியுள்ளது.

இதனால் விஜய் நான் உங்களுக்கு அடுத்த முறை கால்ஷீட் கொடுக்கிறேன் என கூறி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைவிட மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த தகவல் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.