Changes in Cook With Comali 2

கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்யப்பட்டு மாற்றம் ரசிகர்களை மகிழ்ச்சி ஆக்கியுள்ளது.

Changes in Cook With Comali 2 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையலை காமெடியோடு கலந்து கொடுத்து வரும் இந்த நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாவது சீசனுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் மற்றும் ஷகிலா ஆகிய நால்வர் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிப்போட்டி இந்த வாரம் நடைபெறும் இவர்கள் நால்வரில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேசமயம் இந்த வாரத்தோடு நிகழ்ச்சி முடிந்து விடும் என்ற சோகமும் ரசிகர்கள் மனதில் குடி கொண்டிருந்தது. ஆனால் வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோக்களை வைத்து பார்க்கும் போது இந்த வாரம் கிராண்ட் பைனல் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்த வாரம் செலிபிரிட்டி செலப்ரேஷன் தான் நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் ஃபேவரைட் செலப்ரிட்டியை அழைத்து வந்துள்ளனர். கனி அவருடைய தங்கை நிரஞ்சனாவை அழைத்து வந்துள்ளார். அஸ்வின் சாண்டி மாஸ்டர் உடன் வந்துள்ளார்.

பவித்ரா லட்சுமி தன்னுடைய பாய்பிரண்டுடன் வந்து புகழுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

அடுத்த வாரம்தான் கிராண்ட் பைனல் என்பது தெளிவாக தெரிந்து விட்டதால் குக் வித் கோமாளி ரசிகர்கள் கொஞ்சம் உற்சாகம் அடைந்துள்ளனர்.