Chandramukhi 2 Movie Update
Chandramukhi 2 Movie Update

ரஜினி இல்லாமல் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chandramukhi 2 Movie Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் நயன்தாரா, பிரபு, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி.

இன்று வரை ரசிகர்கள் ரசிக்கும் படங்களில் ஒன்றாக இருந்து வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.

ஆனால் இந்த படத்தில் ரஜினி நாயகனாக நடிக்கவில்லை. அவரின் அனுமதியுடன் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளாராம்.

கொரானாவால் அகல பாதாளத்திற்கு சென்ற தமிழ் சினிமா, 21 நாளில் இத்தனை கோடி நஷ்டமா? – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இந்த படத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் வாங்கிய அட்வான்ஸ் தொகையின் மூலமாகவே அவர் நிவாரண நிதி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.